அமைச்சர் பஸிலின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்படும்?

300 Views

பஸிலின் இந்திய விஜயம்பஸிலின் இந்திய விஜயம்: நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தமது இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.

மல்வானையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பிலான வழக்கு இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்திருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவிடம் ஊடகவிய லாளர்கள் இந்திய பயணம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால், தற்போது அங்கு செல்ல முடியாது என பஸில் ராஜபக்‌ஷ இதன்போது பதிலளித்தார்.

Leave a Reply