இலங்கையின் வடமேல்மாகாணத்தின் ஆளுநர் வசந்தகரணாகொடவை அவர் கடற்படையின் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் அவருக்கிருந்த தொடர்புகளிற்காக தடைப்பட்டியலில் சேர்த்துக்கொண்டமைக்காக அமெரிக்காவிற்கு பிரித்தானிய தமிழர் பேரவையாகிய நாங்கள் நன்றியைதெரிவித்துக்கொள்கின்றோம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடமேல்மாகாணத்தின் ஆளுநர் வசந்தகரணாகொடவை அவர் கடற்படையின் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் அவருக்கிருந்த தொடர்புகளிற்காக தடைப்பட்டியலில் சேர்த்துக்கொண்டமைக்காக அமெரிக்காவிற்கு பிரித்தானிய தமிழர் பேரவையாகிய நாங்கள் நன்றியைதெரிவித்துக்கொள்கின்றோம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
2009 இல் முடிவிற்கு வந்த 30 வருடகால போரின் போது யுத்தகுற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இலங்கையின் மனித உரிமை மீறல்குற்றவாளிகளை அடையாளம் கண்டு தடைகளை விதித்தமைக்காக அமெரிக்கா கனடாவிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்ற போதிலும் பிரிட்டன் இலங்கையின் குற்றவாளிகளிற்கு எதிராக அவசியமான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை – யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களான பின்னரும்- இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை குழு இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிட்டு 8 வருடங்களாகின்ற போதிலும் பிரிட்டன் நடவடிக்கை எதனையும் எடுக்காதது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் எடுத்துள்ள நடவடிக்கைள் போல இலங்கை குறித்த சர்வதேச மனித உரிமை தடைசட்டத்தின் கீழ் பிரிட்டன் உறுதியான உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானியாவில் சர்வதேச மனித உரிமை தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதனை இலங்கைக்கு எதிராக பயன்படுத்துமாறு பிரித்தானியாவைகேட்டு;க்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலகின் ஏனைய பல நாடுகளில் உள்ள குற்றவாளிகளிற்கு; எதிராக தடைச்சட்டத்தை பயன்படுத்திய பிரிட்டன் ஏன் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைந்துள்ளோம் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் கனடாவும் தொடர்ந்தும் குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கும்போது ஐரோப்பாவும் பிரிட்டனும் ஜிஎஸ்பியை தொடர்கின்றன இது இலங்கை தனது இனஅழிப்புதிட்டத்தை முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி வெளிப்படை தன்மை போன்றவற்றை பிரிட்டன் பின்பற்றவேண்டும், இலங்கையுடனான ஒழுக்கநெறிக்கு முரணான வர்த்தகத்திற்கு தீர்வை காணவேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
கனடா அமெரிக்க எடுத்துள்ள நடவடிக்கைகைள பின்பற்றவேண்டும் என பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை ஊக்குவிக்கின்றோம்,எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.