இம்மாத இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயமாக நீக்கியே தீருவோம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இம்மாத இறுதிக்குள் அந்த நடவடிக்கை முழுமைபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. எனினும், இன்றளவும் அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. ஆனால் இந்த மாதத்தின் இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உறுதிமொழி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றியே தீருவோம். எனவே,பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படுவது உறுதி. அதைத் தக்கவைப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை – என்றார்.