“இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம். வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் ‘டித்வா’ புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது போன்று வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் அவ்வாறே உள்ளன. ஏனெனில் கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீசிய புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டம் வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறமுடியும்.” என இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
‘டித்வா’ புயலுக்குப் பின்னரும் IMF வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டார்.
“நிதியியல் துறையின் வருமானத்தை பலமாகச் சேகரித்தல், சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளைப் பலப்படுத்துதல் என்பன வேலைத்திட்டத்தின் முதல் தூணாகும்.
இரண்டாவது தூண் கடன் நிலைத்தன்மையை நிறுவுதல், நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பதாகும். விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அதன் மூன்றாவது தூணாகும்; இதில் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்ட வெளிப்புறத் தேவைகளைப் பலப்படுத்துவதும் உள்ளடங்கும்.
நான்காவது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இறுதியாக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழலைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுவரை இந்த இலக்குகளுக்காக எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் உண்மையில் சிறப்பானது. இது குறித்துப் பல துறைகளில் நாம் திருப்தியடைய முடியும். நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்துள்ளதால், கடந்த ஆண்டில் 5% வளர்ச்சியை எட்டியுள்ளது. மொத்தத் தேசிய உற்பத்தியின் (GDP) முன்னேற்றமாக வரி வருமானம், நெருக்கடி நிலவிய காலத்தில் 7.3% ஆக இருந்தபோதிலும், இன்று அது 14.8% வரை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் மேற்கொண்ட முன்னேற்றம் பிரதிபலிக்கிறது.
வருமானத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியையும் ஒரு பகுதியாக அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கான அடித்தளத்தை அமைக்கிறது.
விலைகளைக் கருத்திற்கொள்ளும் போது, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போது பணவீக்கம் 70% என்ற உயர் மட்டத்தில் காணப்பட்டது.
இன்று அது 2% மற்றும் 3% இற்கு இடையில் காணப்படுவதுடன், மத்திய வங்கியின் இலக்கான 5% மட்டத்தில் ஸ்திரமடையும்.”
இதேவேளை, ‘டித்வா’ புயலுக்குப் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்கள் மிக வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ கூறினார்.



