மலையக மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியாக பேச வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
அதன் மூலம் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக மலையக தமிழ் மக்கள் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென நாம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எதிர்பார்க்கிறோம்.
இது இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து வெளிப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இனி, இதை உரையுடன் நிறுத்திவிடாமல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறையில் செய்து காட்ட வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.