வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை- வெளிவிவகார அமைச்சர்

வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ,நாங்கள் இந்தியாவுடன் மேலும் ஒன்றிணைவை  ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்,இதனடிப்படையில்  இந்தியாவுடனான விமானசேவைகளை அதிகரிக்க முயல்கின்றோம். விரைவில் இந்தியா இலங்கை படகுச்சேவையை ஆரம்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடனான ஈடுபாடுகள் ஒரு சிறப்பான வெற்றிகரமான முயற்சியாக காணப்படும்   எனவும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தனியொரு பிராந்திய கூட்டமைப்புடன் மாத்திரம் இணைந்துசெயற்படவிரும்பவில்லை நாங்கள் சீனாவுடன் மேற்குலக மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடவிரும்புகின்றோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.