புதியவர்கள் வந்து அரசாங்கத்தை நடாத்தி சென்றாலும் பொருளாதாரத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை- செல்வம் எம்பி.

316 Views

NW07 புதியவர்கள் வந்து அரசாங்கத்தை நடாத்தி சென்றாலும் பொருளாதாரத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை- செல்வம் எம்பி.

புதியவர்கள் வந்து  இந்த அரசாங்கத்தை நடாத்தும் நிலமை காணப்பட்டாலும் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என  வன்னி பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய அமைச்சரவை என்பது பழைய தலைகள் மாற்றப்பட்டு புதிய தலைகள்  வரவேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள்.  அதே கட்சியை சார்ந்தவர்களையே நியமிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

ஆட்சி மாற்றம் என்பது பிரதமர் மாற வேண்டும், ஜனாதிபதி மாற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை.  அதாவது பிரதமராவது மாறுகின்ற ஒரு நிலைகாணப்பட வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிய தலைகள் தான் வரபோகிறார்களே தவிர,  நான் நினைக்கின்றேன் சஜித் பிரேமதாசாவின் கட்சி அதனை மறுத்துவிட்டது. ஜேவிபியும் மறுத்து விடும் என நினைக்கின்றேன்.  விமல்வீரவன்ச, கம்மன்பில அவர்கள் இந்த அமைச்சரவைக்குள் போகக்கூடிய வாய்ப்புக்கள் கூட இருக்கின்றது.

அந்தவகையில் புதியவர்கள் வந்து  இந்த அரசாங்கத்தை கொண்டு நடாத்தும் நிலமை தான் காணப்படுகின்றது. ஆனாலும் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. ஆகவே இந்த விடயத்திலே எனது கருத்து பழைய தலைகள் மாறி புதிய தலைகள் வரபோகின்றது அவ்வளவே.

இந்த ஆட்சி மாற்றத்தில் எமது பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்பது சந்தேகம் தான் ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தால் புதிதாக ஒன்றுமே நடைபெற போவதில்லை என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply