இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தமது நாடு எந்நேரமும் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளில் தமது நாடு இலங்கைக்கு ஆதரவாக நிற்கத் தயாராக உள்ளது எனவும், தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கும் மனப்பான்மையுடன் இருக்கின்றது.
ஹோமூஸ் நீரிணை வழியாக செல்லும் வர்த்தக போக்குவரத்திற்காக மேலதிக கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை. மேலதிக கட்டணம் அறவிடுவது எங்கள் கொள்கை அல்ல” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையை எந்தவொரு சிக்கலிலும் விட விரும்பவில்லை எனவும், இலங்கைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தூதுவர் வலியுறுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக பேசுகையில், “எங்கள் நண்பர்களுக்கு அந்த வழி மூடப்படவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



