ஈரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளார்கள். தலைகுனிந்துள்ளார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் சாடியுள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தில் கூட கண்டனத்தை வெளியிடாதது அவமானத்துக்குரியது எனத் தெரிவித்த அவர், டொனால்ட் ட்ரம்ப் பெரிய சைத்தான், இஸ்ரேலில் உள்ளவர் குட்டி சைத்தான் இவர்களே உலக அமைதிக்கு இன்று அச்சுறுத்தலாக செயற்படுகிறார்கள் என்றார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.



