யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு விஐயம் செய்து விகாரையை பார்வையிட்டுள்ளதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.