சீனாவில் எச்.எம்.பி.வி என்ற மனித மெட்டாப்நியூமோ வைரஸ்” தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா மாத்திரமல்ல இலங்கை உட்பட உலகில் உள்ள பல நாடுகளிலும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆகையால் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை பெறுவது பாதுகாப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.