வெடுக்குநாறி மலை விக்கிரகங்கள் உடைப்பு: மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் விசனம்

133 Views

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சமயத்தின் பெயரால் ஏற்பட்டிருக்கும் முரண்பாடான சூழல் மற்றும் வெடுக்குநாறி மலையில் பிடுங்கி எறியப்பட்ட சைவசமய விக்கிரகங்கள் உடைப்பு குறித்தும் நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம் என மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் விசனம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் நேற்று (27.03.2023) இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில், பல தனித்துவங்களுடனும் மகத்துவங்களுடனும் சிறப்புற விளங்கும் எமது மாவட்டத்தில் நாம் காலங்காலாக சமய சமூக இன ஒருமைப்பாட்டுடனும் சகோதரத்துவத்துடனும் ஒரு தாய் மக்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

சமயம்சார் நம்பிக்கை 

நம்மிடையே பல சமயம்சார் நம்பிக்கை உடையர்களும் சமய மரபுகளைப் பின்பற்றுவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் சமய நம்பிக்கையினை பின்பற்றுகிறவர்களை ஏனைய சமய நம்பிக்கையுடையவர்கள் மதித்து ஐக்கியத்துடனும் சகோரத்துவத்துவத்துடனும் நடந்துள்ள வேண்டும்.

அவ்வப்போது சில தீயசக்திகளும் சமூக விரோதிகளும் சமய உராய்வுகளை பேதங்களை உருவாக்கி இதுனூடாக எமது சமுகத்தை பிளவுபடுத்தவும் குழப்பங்களை வன்முறைகளை மோதல்களை ஏற்படுத்த முயற்சித்த போதும் அவை பெரிதளவில் வெற்றியளிக்காமல் போயிக்கின்றன.

இன முரண்பாடு

சமயம் என்பது ஓவ்வொரு தனிமனிதனதும் சுயாதீனமானதும், சுதந்திரமானதும் தேர்வு மற்றும் நம்பிக்கை ஆகும்.

இந்நாட்டில் நாம் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகாலமாக இன முரண்பாடு ஒடுக்குமுறையினாலும் முப்பதாண்டுகள் போரினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு எண்ணிலடங்காத பேரழிவுகளையும் கண்டுள்ளோம்.

இவற்றிலிருந்து மீளெழ முயற்சிக்கும் எம் மக்களின் வாழ்வில் தற்போதய பொருளாதார நெருக்கடி, போதைப்பொருள் பாவனை என்பவற்றை முகங்கொடுக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply