அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கழமை ( 04) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள் இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் சம்பள உயர்வு என்ற பெயரில் தமக்கான சம்பளம் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
பாடசாலை பல்கலைக்கழக வாயிலில் சுமார் 12 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணி வரை இடம்பெற்றதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர்.
அதே போல் சம்பள முரண்பாடு, புதிய அரசாங்கத்தின் பாதீட்டில் தங்களுக்கு நன்மைகள் வழங்கப்படவில்லை என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஒரு மணித்தியால வேலை நிறுத்தத்தப் போராட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டனர்.



