வவுனியா பல்கலைக்கழகம், பிரதேச அபிவிருத்திக்கு  பெரும் பங்களிப்பை வழங்கும்:  துணைவேந்தர் மங்களேஸ்வரன்

660 Views

IMG 8598 வவுனியா பல்கலைக்கழகம், பிரதேச அபிவிருத்திக்கு  பெரும் பங்களிப்பை வழங்கும்:  துணைவேந்தர் மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக் கழகமானது அடுத்து வரும் மூன்று வருட காலப் பகுதியில் பிரதேச அபிவிருத்திக்காக பெரும் பங்களிப்பை வழங்கும் என அதன் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக இன்று   பதவி யேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகமாக செயற்பட்டு வந்த இப் பல்கலைக் கழகம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் வவுனியா பல்கலைக் கழகமாக செயற்பட வுள்ளது. அதற்கான அனுமதியை பெறுவதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

வவுனியா வளாகத்தை பல்கலைக் கழமாக உயர்வதற்கு கடினமாக பாடுபட்டேன். என்னுடைய இலக்கு, எனது இந்த மூன்று வருட காலப் பகுதியில் வவுனியா பல்கலைக் கழகத்தை மென்மேலும் தரம் உயர்த்துவதுடன், பிரதேச ரீதியான அபிவிருத்திக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும்  பெரும் பங்களிப்பை வழங்குவதே.

எமது பல்கலைக் கழகமானது வரும் மாதம் முதலாம்  திகதி முதல் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கின்றது.

Leave a Reply