வவுனியா : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செவ்வாய்க்கிழைமை (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தின் போது குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, புதிய பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நிறுத்து, புதிய புதிய சட்டங்களை இயக்கி மக்களின் குரல்களை நசுக்காதே போன்ற பல்வேறு பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.