அமெரிக்க வீசா எச்சரிக்கை: விதிமீறினால் நாடு கடத்தப்படலாம் – இலங்கை பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

அமெரிக்கா செல்லும் இலங்கை பயணிகள் தங்களது வீசா வகைக்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தவிர, பிற பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா செல்லும் பெரும்பான்மையான பயணிகள் B1/B2 (Visitor Visa) வீசா வகையிலேயே செல்கின்றனர். இந்த வீசா மூலம் பின்வரும் செயல்களை மட்டுமே செய்ய முடியும்:

ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் (Negotiating contracts)

சுற்றுலா மற்றும் உறவினர்களைச் சந்தித்தல்.

B1/B2 விசாவில் அமெரிக்கா சென்று அங்கு சம்பளம் பெறும் பணிகளிலோ அல்லது வேலை தொடர்பான நடவடிக்கைகளிலோ (Employment) ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும்.

வேலை செய்ய விரும்புபவர்கள் அதற்குரிய பிரத்யேக விசா வகையை (Work Visa) முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் பயணிகள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் (Deportation). மேலும், அவர்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாதபடி நிரந்தரத் தடை (Permanent Ban) விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

பயணிகள் தங்களது பயண நோக்கத்திற்குத் தகுந்த சரியான வீசா வகையைத் தெரிவு செய்வதை உறுதிப்படுத்துமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.