அமெரிக்காவின் விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர், இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுடன் இணைந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு (SLNS Gajabahu ) கப்பலில் பயணம் மேற்கொண்டார்.
இது குறித்து அமெரிக்கத் தூதரகத்திக் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி, இந்த SLNS Gajabahu கப்பல், முன்னதாக அமெரிக்க கடலோர காவல் படைக்கு (U.S. Coast Guard) சொந்தமான கப்பலாக இருந்து பின்னர் இலங்கை கடற்படைக்கு மாற்றப்பட்டதாகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கடல்சார் ஒத்துழைப்பின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், அமெரிக்க கடலோர காவல் படையின் முன்னாள் DECISIVE கப்பல் (ex-DECISIVE) தற்போது பசிபிக் கடல் வழியாக இலங்கை நோக்கி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அது இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய இணைப்பு, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான இராணுவத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான கடல்சார் கூட்டாண்மை, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



