ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் யாரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்க கடற்படை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
“முதல் விபத்தில், அமெரிக்க போர்க்கப்பலான யூஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்ட எம்ஹச்-60ஆ சீ ஹாக் உலங்கு வானூர்தி தென் சீனக் கடலில் விழுந்தது.” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலங்கு வானூர்தியில் இருந்த மூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தான், அதே போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட போயிங் எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னட் போர் விமானமும் தென் சீனக் கடலில் விழுந்ததாக அமெரிக்க கப்பற்படை தெரிவித்துள்ளது.
போர் விமானத்தில் இரண்டு பேரும் விமானத்திலிருந்து குதித்து பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் இரண்டு விபத்துகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க கடற்படையில் அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது ஆசிய சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்தோனீசியா சென்றுவிட்டு தற்போது ஜப்பானில் உள்ளார் டிரம்ப்.



