வீடியோவை பகுப்பாய்வு செய்த நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள இராணுவத் தளத்தின் மீது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை தாக்கியுள்ளது.
இதில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட வீடியோ, உண்மையானது என ‘பிபிசி வெரிஃபை’ உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மினாப்பில் உள்ள ஷஜாரே தயேபா தொடக்கப் பள்ளிக்கு அடுத்துள்ள ஈரானிய புரட்சிகர காவல் படை தளத்தை ஓர் ஏவுகணை தாக்குவதற்கு முந்தைய தருணங்கள் பதிவாகியுள்ளன.
செயற்கைக்கோள் படங்கள், சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் நிபுணர்களின் பகுப்பாய்வு மூலம் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பிபிசி ஏற்கெனவே உறுதி செய்துள்ளது.
நன்றி பிபிசி தமிழ்



