ஏமனின் குதீஸ் அமைப்பினருட னான போரில் அமெரிக்கா தனது மூன்றாவது எப்-18 விமானத்தையும் இந்தவாரம் இழந்துள் ளது. ஏமனில் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய விமானம் செங் கடல் பகுதியில் தரித்து நின்ற அமெரிக்காவின் ஹரி ரூமர் என்ற விமானந்தாங்கி கப்பலில் இறங்க முற்பட்ட சமயம் தவறி கடலில் வீழ்ந்துள்ளது.
விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானி சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
கடந்த வாரமும், குதீஸ் அமைப்பினர் அமெரிக்க கப்பல் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக கப்பலை விரைவாக திருப்பிய போது மேல் தளத்தில் தரித்து நின்ற விமானம் கடலில் வீழ்ந்திருந்தது.
கடந்த நவம்பர் மாதம் குதீஸ் அமைப்பி னர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு கப் பலுக்கு திரும்பிய விமானத்தின் மீது குதீஸ் அமைப்பினரின் ஏவுகணையை குறிவைத்து அமெரிக்காவின் மற்றுமொரு கப்பல் ஏவிய ஏவுகணை மோதியதால் விமானம் கடலில் வீழ்ந்து நொருங்கியிருந்தது.
கடந்த 6 மாதங்களில் ஒவ்வொன்றும் 60 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 3 விமானங் களை அமெரிக்கா இழந்துள்ளது. அதேசயம் 2023 ஆம் ஆண்டு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது குதீஸ் அமைப்பினர் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இதுவரையில் 20 இற்கு மேற்பட்ட அமெரிக்காவின் எம்.கியூ-9 ரக விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.