ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வெனிசுவேலா எண்ணெய் உடன் தொடர்புடைய ஒரு டாங்கர் கப்பலை வட அட்லாண்டிக் கடலில் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு முன், மரினேரா என்ற அந்த கப்பலை நோக்கி பல ராணுவ விமானங்கள் சென்றன. ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகளில், அந்த கப்பலுக்கு அருகில் ஒரு அமெரிக்க கப்பல் இருப்பதும் தெரிந்தது.

பிபிசி வெரிஃபை அந்த டாங்கர் கப்பலின் பயணத்தைத் தொடர்ந்து கண்காணித்தது. தற்போது அந்த கப்பல் ஐஸ்லாந்தின் தெற்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

அந்த கப்பல், அமெரிக்க தடைகளை மீறியதாகவும், இரானிய எண்ணெயை ஏற்றி சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அது வெனிசுவேலா எண்ணெயை ஏற்றி சென்றதாக கூறப்பட்டாலும் தற்போது அந்த கப்பல் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.