யாழ்ப்பாணத்தில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிவில் சமூக பிரதிநிதிகள் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிவில் சமூக பிரதிநிதிகள் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் (jule jiyoon chung) சிவில் சமூக பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

“எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதன் மூலம் சிவில் சமூகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஜனநாயக இலங்கைக்கான எமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கும் நான் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்தேன்“ என இச்சந்திப்புக் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் தனது  ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயகத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், தமிழ் சிவில் சமூக அமையத்தை சேர்ந்த பொ.ந.சிங்கம் உள்ளிட்டோர்  கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று மதியம் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக வருகை தந்துள்ள அமெரிக்கத் தூதுவர், அடுத்த சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மேலும் பல்வேறு  அரசியல் தரப்பினரை சந்திப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

Tamil News