அமெரிக்க தூதர் – ஜனாதிபதி அநுர சந்திப்பு

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, இன்று புதன்கிழமை (26) அமெரிக்க தூதர் ஜூலி சங், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது, எதிர்வரும் புதிய ஆண்டில் ஒன்றிணைந்த முன்னேற்றத்தை விரிவுபடுத்துவது,

அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதேபோல், அமெரிக்காவின் மூலதன நலன்களுக்கு உதவும் வகையில், இரு நாடுகளுக்கும் பயன் உள்ள புதிய வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

இந்த சந்திப்புக் குறித்து அமெரிக்கத் தூதர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அமெரிக்கா–இலங்கை கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதி தொடரும். இது இரு நாடுகளுக்கும் சமமான நன்மைகளை வழங்கும்” என்று அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.