தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

233 Views

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தியதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் ,“இன்றைய சவால்களைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும், தீர்வில் அனைத்து இலங்கையர்களின் நலன்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply