சீரற்ற காலநிலை: கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 45,420 குடும்பங்களைச் சேர்ந்த 147,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை  வெள்ளப் பெருக்கினால்  கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த  நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்  செவ்வாய்க்கிழமை  (09) தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் 122 வீடுகள் முழுமையாகவும் 2,182 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை  பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.

அத்துடன் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

திருகோணமலை  மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 214 கிராம சேவகர் பிரிவுகளில் 26,009 குடும்பங்களைச் சேர்ந்த 86,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுரை 727 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில்  08 பேர் உயிரிழந்ததுடன் 6,942 குடும்பங்களைச் சேர்ந்த 23,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுரை 111 வீடுகள் முழுமையாகவும் 509 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.