யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவுசெய்யப்படாத விடுதிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பதிவுசெய்யாதவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பணித்துள்ளார்.
வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகத்தினருடனான மாதாந்தக் கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார். உரிய அதிகாரிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாவிகள் தங்கும் விடுதிகளின் தரத்தைக் கண்காணிக்கவேண்டும்.
அதேவேளை வீதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக உள்ளூராட்சிசபைகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



