நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அந்த சங்கம் நேற்று அறிவித்தது.
அதன் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆனால் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று கூறிய அவர், தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.
பல்கலைக்கழக பேராசிரியர்களின் பற்றாக்குறை தற்போது கடுமையான நிலையில் இருப்பதாகவும், பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.