இலங்கை : ஊரடங்கை மீறி எதிர்கட்சி தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று (03) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற இருந்த நிலையில் திடீரென நேற்றைய தினம் இலங்கை முழுவதும்  மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும்,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தற்போது கொழும்பில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/manusha.nanayakkaara/videos/303526241839958/

அதே நேரம் எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தை காவல்துறையினர் சுதந்திரசதுக்கத்தில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.