சீரற்ற வானிலை : 09 பேர் உயிரிழப்பு

மழையுடன் கூடிய வானிலை நாளை முதல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் இந்த நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மையம்  அறிவித்துள்ளது.