மன்னார் மாவட்டம், 40 வருட வரலாற்றில் கண்டிராத வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு மாவட்டத்தின் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கமைய 30 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 269 அங்கத்தவ்கள் பாதிப்படைந்துள்ளனர். 22 முழுமையாகவும் 822 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளதோடு பெருமலவிலான கால்நடைகளை காணவில்லை என்றும் இவற்றில் ஒரு சில ஆயிரம் கால் நடைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேநேரம் கன மழை பெய்து 3 நாள்கள் கடந்தபோதும் 3ஆம் திகதி மாலைவரை குஞ்சுக்குளம் பகுதி மக்கள் வெளியேற முடியாத நிலையே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.




