போர்க் குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகள் வேண்டும்- ஐ.நா

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் போர்க் குற்றங்களை மேற்கொண்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிசேல் பசலெற் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னள் உறுப்பினரும், சிறீலங்கா அரசின் அமைச்சராக பணியாற்றியவருமான கருணா மீதான குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொண்டுள்ளோம். சிறார் படை சேர்ப்பு மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அவர் விசாரணை செய்யப்பட வேண்டும்.

இந்த விதி சிறீலங்காவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.