பயங்கரவாத தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் கடிதம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இடை

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்வுக்குட்படுத்தி, பாதகமான சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின் கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் ஏழு சிறப்பு அறிக்கையாளர்கள் இணைந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறுமாறும்  பயங்கரவாத சட்டத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளும் வரையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் அக்கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply