“ உக்ரைன் மிகவும் கடினமான ஒரு முடிவை மேற்கொள்ளவேண்டும்: அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

“உக்ரைன் மிகவும் கடினமான ஒரு முடிவை மேற்கொள்ளவேண்டும். ஒன்று, நாம் நமது கண்ணியத்தை இழக்க வேண்டி வரலாம், அல்லது நம் மிக முக்கியமான கூட்டாளியான அமெரிக்காவை விட்டு விலகவேண்டியதாகி விடலாம்” என்று அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

“இது நம் வரலாற்றின் மிகவும் கடினமான தருணங்களுள் ஒன்று” என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போருக்கு முடிவு காண அமெரிக்கா தயாரித்த அமைதி திட்டத்தின் வரைவு ஊடகங்களுக்கு கசிந்ததையடுத்து, ஜெலன்ஸ்கி இந்த கருத்துகளை வெளியிட்டார்.

இது, உக்ரைன் முன்பு ஏற்க மறுத்த அதே நிபந்தனைகளை மீண்டும் முன்வைக்கிறது. 28 அம்சங்களைக் கொண்ட இந்த அமைதி வடிவமைப்பு, உக்ரைன் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியிலிருந்து படைகளைப் பின்வாங்குவது, அதன் படை எண்ணிக்கையை குறைப்பது, மேலும் உக்ரைன் ஒருபோதும் நேட்டோ (NATO) கூட்டணியில் சேராது என்பதற்கான உத்தரவாதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2022ம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா, அதன் 20 சதவிகித பகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.