188 Views
உக்ரைன் நெருக்கடியால் இலங்கைக்கு பாதிப்பு: உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கை தேயிலையை விற்பனை செய்வது கடினமாகலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சமீபகாலத்தில் உக்ரைன் மற்றும் ரஸ்யாவிலிருந்தே அதிக சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்துசேர்ந்துள்ளனர்.
உக்ரைன் நெருக்கடியால் அந்த நாடுகளில் சுற்றுலாப்பயணிகள் வருவது பாதிக்கப்படலாம். இது பாரிய தாக்கத்தை எங்களிற்கு ஏற்படுத்தும்.
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு மேலும் அதிக தொகையை இலங்கை செலுத்தவேண்டிய நிலையேற்படலாம்.
உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு மேலும் டொலர்கள் தேவைப்படும் ” என்றார்.