தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை!

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி)  அறுதிப் பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 61%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.  தேசிய மக்கள் சக்தி மொத்தம் 141 இடங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி மொத்தம் 141 இடங்களை வென்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை.