இலங்கையில் ஐந்தில் இருவர் (அல்லது 39.8%) பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
United Nations Fund for Population Activities (UNFPA) and the Department of Census and Statistics (DCS) நடத்திய இந்த ஆய்வு 25 மாவட்டங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
UNFPA ஆய்வின் படி தங்கள் துணையால் பாலியல் வன்முறையை அனுபவித்த 49.3% பெண்கள் எந்த இடத்திலும் முறையான உதவியை நாடவில்லை என்றும் அதே சமயம் இந்த வன்முறைகளை அனுபவிக்கும் போதும் 52.3% பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாததற்கு முக்கியக் காரணம் தங்கள் குழந்தைகளை விட்டு அவர்கள் வெளியேற விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த ஆய்வில் ஐந்தில் ஒரு பெண் (அல்லது 21.4%) பெண்கள் இந்த வன்முறைகளை வெட்கம், அவமானம் காரணமாக வெளியில் கூற தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்நான்கில் ஒரு பங்கு பெண்கள் வன்முறையின் காரணமாக கடுமையான உளவியல் தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
அத்தோடு 35.7% பெண்களுக்கு தற்கொலைக்கு முயற்சி செய்யும் எண்ணம் இருப்பதாக அறிக்கையின் புள்ளிவிவரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் தனது வாழ்க்கைத்துணையால் உடல் ரீதியாக பெண்கள் அனுபவிக்கும் வன்முறையை 60% குழந்தைகள் பார்த்துள்ளனர் அல்லது அது தொடர்பில் கேட்கிறார்கள், இதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.