ஈரானின் அணு சக்தி ஆய்வு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் வகுத்த திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எதிர் ப்பை தெரிவித்ததுடன், அந்த திட்டத்தையும் நிறுத்தியுள்ளதாக த நியூயோர்க் ரைம்ஸ் நாளேடு கடந்த புதன்கிழமை(16) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் இந்த தாக்குதலை மேற்கொள்ள யூத நாடு திட்டமிட்டிருந்தது. வான் தாக்குதல் அல்லது வான் தாக்குதலுடன் இணைந்த கொமோண்டோ படை நடவடிக்கை மூலம் ஈரானின் அணுசக்தி ஆய்வு மையங் களை அழிப்பதன் மூலம் அது அணுக் குண்டு தயாரிக்கும் கால எல் லையை ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு பின்போடலாம் என இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் மீது தொடர்ச்சியாக ஒரு வாரத்திற் கும் மேலாக கடுமையான வான் தாக்குதலை நடத்துவதும் இஸ்ரேலின் திட்டமாகும்.
ஆனால் தாக்குதலை விட ஈரானுடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதையே அமெரிக்க அதிபர் விரும்புகின்றார். வெள்ளை மாளிகையில் இது தொடர்பில் அமெரிக்க அதிபர், துணை அதிபர் ஜே. டி. வான்ஸ், பாதுகாப்புச் செயலாளர் பீற் ஹெசத் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ருல்சி கப்பாட் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஈரான் மீதான தாக்குதல் அந்த பிராந்தியத்தில் மிகப்பெரும் மோதல்களை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே அமெரிக்க அதிபர் இஸ்ரேலின் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்பிரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஈரானும் இஸ்ரேலும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் கடந்த மாதம் தெரிவித்திருந்தபோதும், பின்னர் கடந்த சனிக்கிழமை(12) ஓமானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் நம்பிக்கை தருவதாக இரு தரப்பினரும் தெரிவித்திருந்தனர். இரண்டா
வது சுற்று பேச்சுக்கள் ஒஸ்ரியாவில் இடம் பெற வுள்ளன.