356 Views
எரிபொருளுக்காக அலைமோதும் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் டீசல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி கிண்ணியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று (05) இரவு மக்கள் வாகனங்களுடன் காத்து நிக்கின்றனர்.
நித்திரையின்றி பல மணி நேரம் காத்திருந்து எரிபொருளினை பெரும் சிரமத்துக்கு மத்தியில் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அன்றாடம் செய்யும் கடல் தொழில் உள்ளிட்ட ஏனைய கைத்தொழில்களும் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.