திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : ஜனாதிபதிக்கு கடிதம்

‘புத்தசாசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட புண்ணிய பூமியிலேயே தேரர்கள் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தார்கள்.இந்த சாதாரண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேரர்கள் மீது குற்றஞ்சுமத்தியுள்ளமை புத்தசாசனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியாகும்.

இந்த விவகாரத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆளும் தரப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்களே தவிர ஏனைய இனத்தவரோ அல்லது மதத்தவரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தேரர்கள் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தார்களே தவிர வேறேதும் குற்றமிழைக்கவில்லை. ஆகவே அரசாங்கத்தின் தலையீட்டுடன் விளக்கமறியலில் உள்ள தேரர்கள் உட்பட 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.