அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில், தற்போது சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா – அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்து உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் நிலையில்
இந்தியாவை மட்டும் அமெரிக்கா இலக்கு வைப்பதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது சீனா மீதும் அதிகளவான வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.