யாழ்ப்பாணத்தில் உள்ள 43 எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் இரு நாள்களில் 3 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
யாழ். மாவட்டத்திற்கு வழமையாக நாள் ஒன்றிற்கு ஒரு லட்சம் லீற்றர் பெற்றோலும் 90 ஆயிரம் லீற்றர் டீசலும் தேவைப்படுகின்றது.
இப்பொழுது மத்தியகிழக்கில் நடைபெறும் ஈரானை மையமாக கொண்ட மோதல் ஆரம்பித்த காரணத்தினால் அதிக பெற்றோல் வரிசைகளும் அதிக அளவு பெற்றோல் விநியோகமும் நடக்கிறது.
இது அதிகரித்த பாவனை அல்ல. மாறாக அதகரித்த கொள்வனவாகவே காணப்படுகின்றது. இந்த அதிகரித்த கொள்வனவு சேமிப்பை நோக்கமாக கொண்டு இடம்பெறுகின்றது. இருந்தபோதும் ஞாயிற்றுக் கிழமை யாழ். மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை ஒரு லட்சத்து 95 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.



