பேச்சுவாா்த்தைக்குச் செல்வதற்கு மூன்று நிபந்தனைகள் – தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில் தீா்மானம்

148 Views

இனநெருக்கடிக்குப் பேச்சுக்களின் மூலமாக தீா்வைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுக்களுக்குச் செல்வதற்குத் தமிழ்க் கட்சிகள் தீா்மானித்துள்ளன.

இன்றைய தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதியின் பேச்சுக்கான அழைப்பிற்கு தமிழ்த் தரப்பு மூன்று நிபந்தனையின் அடிப்படையில் பதில் வழங்குவதாகவும் இதன் அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

1. நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

  1. அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும்
  2. உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஆகிய மூன்று விடயங்களே இன்றைய பேச்சுக்களின் போது நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன.

கூட்டமைப்பு அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட இக் கலந்துரையாடல் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று மாலை கு நடைபெற்றது.

இம்முடிவுகளை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டவும் தீர்மானிக்கப் பட்டது.

Leave a Reply