இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்லாயிரம் கால்நடைகளைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குளத்தில் நீரேந்து பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்ட பல கால்நடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அத்துடன், பட்டிகளை வெள்ளம் சூழ்ந்ததாலும் ஏராளமான கால்நடைகள் காணாமற்போயுள்ளன. இழப்பீடு வழங்கும் நடவடிக்கைக்காக அது தொடர்பான கணக்கெடுப்பு விரைவில் இடம்பெறவுள்ளது.



