இந்த வருடம் 23 விலங்கு இனங்கள் பூமியில் இருந்து முற்றாக அழிந்துள்ளன. அவை பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அமெரிக்காவின் மீன்கள் மற்றும் வனவளத்துறை இந்த வாரம் அறிவித்துள்ளது.
மீன்கள், பறவைகள் மற்றும் நத்தை இனத்தைச் சேர்ந்த உயிரினங்களே 2021 ஆம் ஆண்டுடன் முற்றாக அழிந்து போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிவடைந்த விலங்கு இனங்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. படத்தில் இருக்கும் பறவையும் அதில் அடங்கும் என்பது வேதனையானது.
உலகில் வாழும் உயிரினங்களில் நான்கில் ஒன்று அழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் செயற்பாட்டால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் சூழல் மாசடைதலே இதற்கான முக்கிய காரணி எனக் கருதப்படுகின்றது. 1980 ஆண்டுடன் ஒப்பிடும் போது கடல்வளம் 10 மடங்கு மாசடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





