அமெரிக்கா – ஈரான் இடையே மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை!

அமெரிக்கா-ஈரான் இடையிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூன்று மணி நேரத்திற்கு பிறகு முடிந்தது.

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அல்புசைதி, பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் ”புதுமையான மற்றும் நேர்மையான யோசனைகளை” பரிமாறிக் கொண்டதாகவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா – ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் சில நிபந்தனைகளை ஏற்க இரான் ஒப்புக் கொள்ளவில்லை.