சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

WhatsApp Image 2024 11 22 at 18.26.14 c481179c சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது.