தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் – மாபெரும் உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை  தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் பல மாவட்டங்களில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.