211 Views
மாவீரர்நாள் நினைவு கூரலுக்கு பெருமளவில் எவ்வித தடைகளும் ஏற்படுத்தவில்லை என்றும் அதனை வரவேற்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் நல்லிணக்க சமிக்ஞை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஒரு சில இடங்களில் மட்டும் தமது பிள்ளைகள் மற்றும் உறவுகளை நினைவுகூர தடைகள் ஏற்படுத்தப்பட்டமையும் அவர் பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.