யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (Sampath Thuyakontha) தெரிவித்துள்ளார். அத்துடன் சமூகத்திற்குள் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற புனையப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க கூற்றுக்களைப் பரப்பும் நபர்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள்.
இது நாட்டிற்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலை என்றும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரச்சாரங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா (Sampath Thuyakontha) தெரிவித்துள்ளார்.



