“நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது” – ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ” ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நாங்களும் எங்களது பல அற்புதமான மற்றும் மிகவும் தைரியமான கூட்டணி நாடுகளும் இணைந்து, இரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம். இரானை முன்னெப்போதையும் விட பொருளாதார ரீதியாக பெரியதாகவும், சிறந்ததாகவும் மற்றும் வலிமையானதாகவும் மாற்றுவோம்.  ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

அவர் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது முன்வைத்த ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த தாக்குவோம்’ (Make America Great Again – MAGA) என்ற வாதத்தைப் போல ” ஈரானை மீண்டும் சிறந்ததாக்குவோம் (MIGA)” என்று குறிப்பிட்டுள்ளார்.